For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெட்டுக்கிளி துவையல்.. கரப்பான் பூச்சி பொறியல்... இனி இதுதான் எதிர்கால சாப்பாடு!

Google Oneindia Tamil News

ரோம்: வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிகள்தான் எதிர்காலத்தில் முக்கிய உணவாக மாறப் போகிறது என்று ஐ.நா.வின் துணை அமைப்பான உணவு மற்றும் விவசாயக் கழகம் தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளி போக வண்டு போன்றவையும் கூட உணவுப் பொருளாக மாறி விடுமாம்.

பூச்சிகளைத் தின்பதில் மக்களிடையே காலப் போக்கில் பெரும் ஆர்வம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பி்ன் அடிப்படையில்தான் இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சொல்கிறது.

பூச்சிகளை சாப்பிடுங்களேன்

பூச்சிகளை சாப்பிடுங்களேன்

பூச்சிகளை சாப்பிடுங்கள் என்பதையும் இந்த அமைப்பு ஊக்குவிப்பதாக அமைப்பின் இயக்குநர் ஈவா முல்லர் கூறுகிறார்.

பூச்சிகளில் புரதம் ஜாஸ்தி

பூச்சிகளில் புரதம் ஜாஸ்தி

பூச்சிகளை சாப்பிடுவதில் தவறில்லையாம். அதில் புரதச் சத்து அதிகம் உள்ளதாம். மினரலும் அதிகமாம். எனவே பூச்சிகளை அப்படியே சாப்பிடலாமாம்.

200 கோடி பேர் சாப்பிடுகிறார்கள்

200 கோடி பேர் சாப்பிடுகிறார்கள்

ஏற்கனவே மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குப் பேர் அதாவது 200 கோடி பேர் பூச்சிகளை சாப்பிட்டு வருகிறார்கள். அவை நல்ல சத்துடையவை என்பதோடு டேஸ்ட்டாகவும் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள்.

வண்டு செம டேஸ்ட்

வண்டு செம டேஸ்ட்

பூச்சிகளில் வண்டின் புழுவானது மிகவும் டேஸ்ட்டானதாம். அதேபோல கரையான் புழுக்களையும் கூட சாப்பிட்டால் நல்லதாம்.

எங்க பார்த்தாலும் பூச்சியப்பா...

எங்க பார்த்தாலும் பூச்சியப்பா...

உலகம் முழுவதும் அதிக அளவில் இருப்பது பூச்சிகள்தான். எனவே பூச்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. அப்படி அப்படியே பிடித்துச் சாப்பிடலாம் என்று சொல்கிறார் முல்லர்.

வாயில் புகும் 1900 வகை பூச்சிகள்

வாயில் புகும் 1900 வகை பூச்சிகள்

உலகம் முழுவதும் 1900 வகை பூச்சிகளை மக்கள் சாப்பிடுகிறார்களாம்.

பூச்சி வேணும்னா பாங்காக் போங்க

பூச்சி வேணும்னா பாங்காக் போங்க

பூச்சி விற்பனையானது பாங்காக், கின்ஹாசா ஆகிய நகரங்களில் பிரபலமாக உள்ளது. அங்கு போனால் கிடைக்காத பூச்சியே கிடையாது.

பன்றிக் கறியை விட பெஸ்ட்

பன்றிக் கறியை விட பெஸ்ட்

பன்றிக் கறியில் 100 கிராமுக்கு 6.0 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது. அதேசமயம், பூச்சிகளில் இது 8 முதல் 20 மில்லி கிராம் கிராமாக உள்ளதாம்.

English summary
Beetles, caterpillars and wasps could supplement diets around the world as an environmentally friendly food source if only Western consumers could get over their "disgust", the UN's Food and Agriculture Organisation (FAO) said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X