For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ்ஸை விட 2 மார்க் அதிகம் வாங்கிய நுண்ணறிவுப்பெண் நேகா

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் "பிரிட்டிஷ் மென்சா' சமீபத்தில் நடத்திய "கேட்டில் 3பி' எனப்படும் நுண்ணறிவுத் திறனை வெளிப்படுத்தும் தேர்வில் 162 மதிப்பெண்களை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நேகா ராமு எடுத்திருக்கிறார்.

இதனால் நேகாவிற்கு, உலக அளவில் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகமும் தங்களிடம் படிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றன.

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தானே...

மேதைகள் 160 தான்…

மேதைகள் 160 தான்…

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியல் மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங், மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரின் நுண்ணறிவுத் திறனே 160 தான் என்கின்றனர்.

இரண்டு புள்ளிகள் அதிகம்…

இரண்டு புள்ளிகள் அதிகம்…

இவர்களை விடவும் நுண்ணறிவுத் திறனில் இரண்டு புள்ளிகள் கூட இருக்கும் நேஹா ராமுவுக்கு உலகப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்து தங்கள் நிறுவனத்தில் படிப்பதற்கு வரவேற்பு அளிக்காமல் இருக்குமா?

பிரம்மித்துப் போனோம்…

பிரம்மித்துப் போனோம்…

நேகாவின் தாய் ஜெயஸ்ரீ இது பற்றி கூறுகையில், "எங்களின் குழந்தையை நாங்கள் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இங்கிலாந்துக்கு கூட்டிச் சென்றபோது அவளுக்கு ஏழு வயது இருக்கும். "டிஃபின் கேர்ள்ஸ்' என்னும் பள்ளியில் அவளை சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வை எழுதவைத்தோம். அந்தத் தேர்வில் அவள் 280-க்கு 280 மதிப்பெண்கள் எடுத்து எங்களையும் அந்தப் பள்ளியில் இருக்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாள். அப்போதே அவளுடைய நுண்ணறிவுத் திறனை நாங்கள் உணர்ந்து கொண்டோம்...'' என்கிறார்.

வீடியோ கேம் தான் ரொம்ப பிடிக்கும்…

வீடியோ கேம் தான் ரொம்ப பிடிக்கும்…

நேகாவின் தாய் ஜெயஸ்ரீ, தந்தை ராமு இருவருமே மருத்துவர்கள். நேகாவுக்கு பள்ளிப் பாடங்களைப் படிப்பதை விட, வீடியோ கேம்களை விளையாடுவதில்தான் விருப்பம் அதிகமாம்.

ஹாரியின் விசிறி…

ஹாரியின் விசிறி…

உலகில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் நேகாவின் நுண்ணறிவுத் திறனுக்கு விசிறியாக இருக்க, நேகாவோ ஹாரி பாட்டரின் பரம விசிறியாம்!

English summary
When UK-based Neha Ramu, 12, took the Mensa test (an association of people with high IQ with branches across the world) in February this year, it finally ended the suspense for her ophthalmologist parents Ramu Muniraju and Jayashree.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X