For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6,000 மாதச்சம்பளம் போதும்... 1.9 கோடி செக் வேண்டாம்: நேர்மை வாழ்க்கையை விரும்பும் ஆட்டோ டிரைவர்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: மாதம் 6,000 சம்பாதிப்பு போதும். நேர்மையாக வாழ தனது பெற்றோர்கள் கற்றுத் தந்துள்ளதாகக் கூறி ராஜு என்ற ஆட்டோ டிரைவர் 1.90 கோடி ரூபாய்க்கான செக்கை திருப்பித் தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சனாந்த் என்ற இடத்தில் உள்ள டாட்டா மோட்டார்சின் நானோ கார் உற்பத்தி தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பு உயர்ந்ததையடுத்து, குஜராத் வர்த்தக மேம்பாட்டு ஆணையம், ஒரு பிகா(பங்கு) நிலத்திற்கு 28 லட்ச ரூபாய் வீதம், நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு திருப்பி அளிக்க, டாடா மோட்டார்ஸ்க்கு விலை நிர்ணயம் செய்தது.

பொதுவாக பிகா என்ற அளவு வட இந்தியாவின் சில மாநிலங்களிலும், நேபாள், வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் உபயோகிக்கப்படும் அளவாகும், இது சாதாரணமாக 1500 சதுர மீட்டரில் இருந்து 6771 சதுர மீட்டர் வரை அளவிடப்படும்.

10 பிகா நிலங்கள், ராஜு என்ற ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்திற்கு, சனாந்த் பகுதியில் சொந்தமாக இருந்தது. அதில், அவருடைய தாத்தா, முப்பது வருடங்களுக்கு முன்னரே, மூன்று பங்கு நிலங்களை, ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

அந்த இடத்தில் இப்போது சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஆயினும், இதனை வாங்கியவர் நிலத்தை தன்னுடைய பெயரில் பதிவு செய்யாமல் விட்டதால், அரசு ஆவணங்களில் ராஜுவின் பெயரும் அவருடைய தாயாரின் பெயருமே இருந்துள்ளன.

எனவே, அந்நிலத்தின் மதிப்பு 1.90 கோடி என்று மதிப்பிடப்பட்டு, அந்தத் தொகைக்கான காசோலை ராஜுவிடம் வழங்கப்பட்டது. தனது தாயார், மூன்று குழந்தைகள், மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் ராஜு, இதனை மறுத்துள்ளார்.

செக்கை வாங்க மறுத்ததற்கு அவர் கூறும் காரணமாவது, ‘மாதம் 6,000 சம்பாதிப்பு போதும். நேர்மையாக வாழ தனது பெற்றோர்கள் கற்றுத் தந்துள்ளதாகக் கூறும் ராஜு, தன்னிடம் மீதமுள்ள நிலங்களே தனக்குப் போதுமானது என்று கூறியுள்ளார்.

இதுவரை, எத்தனையோ நிலங்களுக்கான பணப் பரிவர்த்தனைகளை செய்திருந்தபோதிலும், 1.90 கோடிக்கான காசோலையை ஒருவர் திருப்பித் தருவது இதுவே முதல்முறை என்று நவீன் பட்டேல் என்ற அரசு வர்த்தக மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

English summary
An Ahmedabad auto rickshaw driver has returned Rs 1.90 crore cheque issued in his name in lieu of three bigha land acquired for Tata's Nano plant in Sanand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X