For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 வினாடிகளில் பற்களால் அசுர வேகத்தில் தேங்காயை உரிக்கும் பனாமா தாத்தா

Google Oneindia Tamil News

ரியோ அலெஜான்ட்: சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் 63 வயது தாத்தா ஒருவர்.

நம்மூரில் 50 வயதைத் தாண்டும் போதே பாதி பற்களை இழந்து, பொக்கையாக காட்சி தரும் தாத்தாக்கள் தான் அதிகம். ஆனால், மட்டையுடன் கூடிய முழு தேங்காயை தனது உறுதியான பற்களால் எட்டே வினாடிகளில் உரித்து, சாதனை படைத்து வருகிறார், பனாமா நாட்டை சேர்ந்த 63 வயது, ஆண்ட்ரெஸ் கார்டின்.

தனது சாதனைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார் கார்டின்...

எதுக்குங்க கடப்பாரை...

எதுக்குங்க கடப்பாரை...

கடப்பாரை மற்றும் அரிவாளின் உதவியின்றி 6 மணி நேரத்திற்குள் 500 தேங்காய்களை என்னால் உரிக்க முடியும்.

கின்னஸ் தான் லட்சியம்...

கின்னஸ் தான் லட்சியம்...

இந்த சாதனையின் மூலம் கின்னஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம்பெற வேண்டும் என்பது தான் இவரது லட்சியமாம்.

தாடை சக்தி வேண்டும்...

தாடை சக்தி வேண்டும்...

‘பல்லினால் தேங்காய் உரிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. இதற்கு தாடையில் சக்தி வேண்டும். பற்களில் சக்தி வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அனுக்கிரகமும் வேண்டும்' என்கிறார்.

அசுர வேக சாதனை...

அசுர வேக சாதனை...

இவர் அசுர வேகத்தில் தேங்காய் மட்டைகளை பல் மற்றும் கைவிரல்களினால் பிய்த்துத் தள்ளும் அழகை ஏராளமான ரசிகர்கள் தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் பிரமிப்புடன் படம்பிடித்து செல்கின்றனர்.

English summary
Panamanian Andres Gardin, 64, popularly known as "Coconut-peeler", "Wari-Wari" or "Mister T", drags two cars with his teeth during a public exhibition in Rio Alejandro, about 85 km north of Panama City, on May 10, 2013. Gardin claims to be accepted in the Guinness Book of World Records, putting forward the fact that he peeled with his mouth, 500 coconuts in six hours in downtown Panama City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X