For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரண தண்டனைகள் குறைந்து வருகிறதாம்... புள்ளிவிவரம் சொல்கிறது

Google Oneindia Tamil News

ரியாத்: பல நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும், சில நாடுகளில் இன்னும் அத்தண்டனை தொடரவே செய்கிறது.

நாட்டிற்கு நாடு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறைகளும் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் விஷ ஊசி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தூக்கு, சவூதி அரேபியாவில் தலையை வெட்டி என வகைபடுத்தலாம்.

ஆனால், ஆண்டிற்கு ஆண்டு மரண தண்டனை விதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மரண தண்டனை பெறும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறதாம்.

கடந்த ஆண்டைவிட குறைவு தான்...

கடந்த ஆண்டைவிட குறைவு தான்...

2012ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,722 பேர் 58 நாடுகளில் மரண தண்டனை பெற்றுள்ளார்களாம். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவு தான்.

2010ல் 67 நாடுகள்... இப்போ 58 தான்.

2010ல் 67 நாடுகள்... இப்போ 58 தான்.

சென்ற ஆண்டு 63 நாடுகளில் 1,923 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாம். இதுவே, 2010ம் ஆண்டு 67 நாடுகளில் 2.024 பேர் மரண தண்டனை பெற்றார்களாம்.

இன்னும் குறையுமாம்...

இன்னும் குறையுமாம்...

வரும் ஆண்டுகளில் இது இன்னும் பல மடங்கு குறைய வாய்ப்பிருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தலையை துண்டித்து தண்டனை...

தலையை துண்டித்து தண்டனை...

சவுதி அரேபியா நாட்டில் கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களுக்கு மரண தன்டணை விதிக்கப்படுகிறது. மரண தன்டணை பெற்றோர்களை தலையை துண்டித்து கொல்கிறார்கள்.

4 மாதத்தில் 40...

4 மாதத்தில் 40...

இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 40 பேருக்கு மரணதன்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தலையை துண்டித்தே கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியா உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடப் பட்டுள்ளது.

English summary
Despite more countries abolishing the death penalty, it is still alive and well around the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X