For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐபிஎல் பிக்சிங் விவகாரம்.. கவாஸ்கர் கடும் அதிர்ச்சி...

By Mathi
Google Oneindia Tamil News

Gavaskar 'shocked' to hear about fixing in IPL
டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு 3 ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சிறைக்குப் போயிருப்பது தமக்கு கடும் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், இந்த சம்பவம் எனக்குக் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த ஐபிஎல் நல்ல களம். அவர்களுக்கான பரிசுத்தொகையும் உயர்வானது.. இருந்த போதும் இப்படியும் சில வீரர்கள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதே நேரத்தில் சிக்கியிருக்கும் வீரர்கள் அப்பாவிகள் என்றால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நாமும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் ஸ்ரீசாந்த் தற்போது இந்திய அணியில் இல்லாமல் இருக்கலாம்.. அவரது பெற்றோருக்கு இது வருத்தமாக இருக்கலாம். அந்த பின்னணியில் அவர் டோணி மற்றும் ஹர்பஜன் மீது புகார் கூறியிருக்கலாம் என புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்றார் அவர்.

English summary
"Shocked" by the allegations of spot-fixing against three Rajasthan Royals' players, former India skipper Sunil Gavaskar said he was astonished that some cricketers were tempted to make a quick buck despite IPL rewarding them handsomely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X