For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர்வாசிகளே... கடுமையான குடிநீர் பஞ்சம் வரப்போகுதாம்... எச்சரிக்கை!!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: நாட்டின் ஐடி தலைநகரம் எனப் போற்றப்படுகிற கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூர் இப்போது கடுமையான குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கி இருக்கிறது. தற்போது கையிருப்பில் இருக்கும் நீர் அடுத்த 20 நாட்களுக்குத்தான் போதுமானது என்றும் கூறப்படுகிறது.

பெங்களூர் நகருக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது அணையில் 28.3 மில்லியன் கியூபிக் தண்ணீர்தான் இருக்கிறது. காவிரி ஆற்றிலிருந்து நாளொன்று கர்நாடக குடிநீர் வாரியம் 1.15 பில்லியன் குடிநீரைப் பெற்று வந்தது. இந்த நிலைமை மே 13-ந் தேதி வரைதான்.. மே 15-ந் தேதியன்று 100 மில்லியன் அளவாக இது குறைந்து போய்விட்டது...

1964ஆம் ஆண்டுக்குப் பிறகு பெங்களூர் நகரம் இப்படி ஒரு மோசமான குடிநீர் பற்றாக்குறையை இப்போதுதான் எதிர்கொள்கிறதாம். மழை பெய்தால் மட்டும்தான் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்கின்றனர் பெங்களூர் குடிநீர் வாரிய அதிகாரிகள். கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு ஹேமாவதி ஆற்று நீர்தான் கடந்த 4 நாட்களாக திறந்துவிடப்பட்டது. ஆனால் மணல் கொள்ளையால் அப்படியே ஒட்டுமொத்த நீரும் அணைக்கு வந்துவிடுவதில்லை..இருப்பினும் கடந்த 15-ந் தேதியன்று நிறுத்தபப்ட்டிருக்கிறது. இதனால் கூடுதல் நீரைத் திறந்துவிடவும் கர்நாடக குடிநீர் வாரியம் கோரியுள்ளது. ஹேமாவதி ஆற்றில் இருந்து உரிய நீர் திறந்துவிடப்பட்டாக வேண்டும். இல்லையெனில் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்கிறது குடிநீர் வாரியம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டம் பெங்களூர் குடிநீர் பற்றாக்குறைக்கு ஒரு காரணம் என்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். பெங்களூர் நகரத்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய மொத்தம் 73.6 மில்லியன் கியூபிக் நீர் தேவை என்று சுட்டிக்காட்டும் அவர்கள் மழை பெய்யும் வரை சமாளிக்க வேண்டியிருக்கிறது.. தற்போதைய கையிருப்பு இன்னும் 20 நாட்களுக்கு மட்டும்தான் போதுமானது என்கின்றனர்..

வருணபகவான் கருணை காட்ட வேண்டும்!.

English summary
The southern Indian city of Bangalore, the country's IT capital, is facing potentially severe water shortages as its main water storage facility, the Krishnaraja Sagar Dam, is currently only holding 28.3 million cubic meters of water, just enough to meet the city’s requirements for 20 more days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X