For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஜி தீவில் வாழும் 101 வயதைக் கடந்த சென்னை பாட்டி

Google Oneindia Tamil News

Indo-Fijian woman turns 101
மெல்போர்ன்: 101 வயதான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சென்னைப் பெண் ஒருவர் பிஜி தீவில் வசித்து வருகிறார்.

தனது சிறு வயதிலேயே இவர் பிஜி தீவுக்கு தனது குடும்பத்தோடு இடம் பெயர்ந்து வந்து விட்டாராம். இந்தப் பாட்டிதான் பிஜி தீவிலேயே மிகவும் வயதான பாட்டியாம்.

சென்னையைச் சேர்ந்தவர், தேவகி. 1912ம் ஆண்டு மே 14ல் பிறந்த இவருக்கு தற்போது 101 வயதாகிறது. சென்னையைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் தமிழ்ப் பாட்டி அல்ல. மலையாளப் பாட்டி ஆவார். நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சிறு வயதிலேயே தன் பெற்றோருடன், ஆஸ்திரேலியா அருகே உள்ள பிஜி தீவுக்கு வந்து விட்டாராம் இவர்.

இந்திய வம்சாவளியினர், ஒப்பந்தத் தொழிலாளர்களாக, பிஜி தீவிற்கு வந்த, 134வது ஆண்டு விழா, கடந்த வாரம் நடந்தது.

இவ்விழாவில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். அதில், தேவகியும் கலந்து கொண்டார். விழாவிற்கு வந்திருந்த அனைவரும், நூற்றாண்டு கடந்து வாழும் தேவகியின் நீண்ட வயதின் ரகசியத்தைக் கேட்டறிய ஆவல் கொண்டனர்.

தன் வயதின் ரகசியம் பற்றி தேவகி குறிப்பிடுகையில், ""இது கடவுளின் கருணை; நீண்ட வாழ்நாளுக்காக ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

English summary
On the day Fiji observed the 134th anniversary of the arrival of Indian indentured labourers Tuesday, an Indian-origin woman in that south Pacific island turned 101.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X