For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிர்ச்சித் தோல்வியால் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்ட விஸ்வநாதன் ஆனந்த்

Google Oneindia Tamil News

ஸ்டாவஞ்சர்: உலக சாம்பியனான விஸ்வநாதன் இந்த வருடம் ஆனந்த் சீனாவின் ஹு வாங்கிடம் இரண்டாவது முறையாக அதிர்ச்சிகரமாகத் தோற்றதன் மூலம் நார்வே செஸ் 2013 சூப்பர் டோர்னமெண்ட்டில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

"உலக சாம்பியன்' இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ஆர்மேனியாவின் லெவான் ஆரோனியன் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்ற 'நார்வே செஸ் தொடர் ' நார்வேயின் ஸ்டாவஞ்சரில் நடந்தது.

Viswanathan Anand
கடைசி சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், சீனாவின் ஹாவ் வாங்க்குடன் 38வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார்.

ஏற்கனவே, போட்டியின் ஒன்பது சுற்றுகளும் முடிந்துள்ள நிலையில், 5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், 4வது இடத்தை ரஷ்யாவின் பீட்டர் சிவில்டர், அர்மேனியாவின் லெவான் ஆரியோன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் செர்ஜீ கர்ஜாகின் 6 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இரண்டாவது இடத்தை நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் (5.5), அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா (5.5) ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

English summary
Going all out for a win to clinch the title, world champion Viswanathan Anand suffered a heart-breaking loss at the hands of Wang Hao of China in the final round to finish a disappointing fourth in the Norway Super Chess tournament on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X