For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தில் பூத்த ‘பிணமலர்’ : 10 ஆண்டுக்கு ஒருமுறை பூத்து 48 மணி நேரத்தில் வாடும் அபூர்வம்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகின் பெரிய மலரான ‘டைட்டன் அரும்' வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள்\ ஈடன் பார்க்கில் பூத்துள்ளது. இம்மலர் 7முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம்.

பொதுவாக மலர் என்றதும் தோற்றத்தோடு சேர்த்து அதன் வாசனையுமே நமது நினைவிற்கு வரும். ஆனால், 'டைட்டன் அரும்' மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளிப்படுத்தும் துர்நாற்றம்தான்.

இதனாலேயே இம்மலருக்கு 'பிணமலர்' என்றொரு செல்லப்பெயரும் உண்டாம்.

பிரமாண்ட மலர்...

பிரமாண்ட மலர்...

மற்ற நறுமணம் வீசும் மலர்களைப் போலன்றி இது சுமார் 10 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது.

குறுகிய வாழ்க்கை....

குறுகிய வாழ்க்கை....

பொதுவாக பூப்பு காலத்தில் 'டைட்டன் அரும்' செடி நாளொன்றுக்கு 10 செ.மீட்டர் வரை வளரும். முழு பூப்பை அடைந்த மலர் 48 மணி நேரத்திற்குள் சுருங்கி இறந்து விடும்.

தப்பித்தவறி மோந்து பார்த்துடாதீங்க...

தப்பித்தவறி மோந்து பார்த்துடாதீங்க...

இந்த மலரின் அழகை ரசிப்பவர்கள் அது வெளிப்படுத்தும் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் மூக்கை மூடிக்கொண்டுதான் பார்க்க வேண்டும்.

கலந்து கட்டின நாற்றம்...

கலந்து கட்டின நாற்றம்...

அழுகிப்போன இறைச்சி, சானம், கெட்டுப்போன பாலாடைக் கட்டி ஆகியவற்றின் முக்கூட்டு கலவையாக இந்த மலரின் துர்நாற்றம், எவரையும் முகம் சுளிக்க வைத்து விடும்.

English summary
The world's smelliest, biggest flower has just bloomed at the Eden Project in Cornwall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X