For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்மோகன் சிங் 80: வயது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… பிரமாண பத்திரம் தாக்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

PM files affidavit correcting age in RS poll papers
கவுகாத்தி: பிரதமர் மன்மோகன்சிங் தனது வயது 80தான் என்று குறிப்பிட்டு வேட்புமனுவில் திருத்தம் செய்ய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் வயது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனது வயது 82 என குறிப்பிட்டிருந்தார் மன்மோகன் சிங். ஆனால், கடந்த 2007ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் தாக்கல் செயத மனுவில் தனது வயது 74 என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஒப்பிடும் போது இப்போது 80 வயதுதான் நிறைவடைந்திருக்க வேண்டும். இதனால் மன்மோகன் சிங் வயது 80ஆ அல்லது 82 ஆ என்று சர்ச்சை எழுந்தது.

இந்த வயது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்மோகன் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வயது 80 என குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களில் திருத்தம் செய்வதற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டருந்தது எனவே மன்மோகன் சிங் தனது வயதை திருத்திவிட்டார். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு மே 23-ம் தேதி கடைசி நாள் ஆகும். அதன்பின்னர் போட்டி இருந்தால் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும். இந்த முறை ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் மன்மோகன்சிங் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா அல்லது கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

English summary
Prime Minister Manmohan Singh, the Congress Rajya Sabha candidate from Assam, has filed a fresh affidavit correcting his age to 80 prior to scrutiny of the nominations Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X