For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் சுழற்றி அடித்த சூறாவளியில் 51 பேர் பலி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று 200 மைல் வேகத்தில் வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாகினர்.

அமெரிக்கா ஓக்லஹோமா மாகாணத்தின் புறநகர் பகுதி மூரேவ். இங்கு சுமார் 55,000 மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது . சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன, தீப்பிடித்து எரிந்தன.

51 dead as massive tornado hits Oklahoma City suburb in US

இதில் பள்ளி குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாகியதாக தெரிய வந்துள்ளது. சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட பொருட்களுக்குள் சிக்கியிருந்த பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 120-க்கும் அதிகமானனோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தோரில், 70க்கும் மேற்பட்ட குழந்தைகஉம் அடக்கம். இவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கு உடனடியாக அவசரநிலை உதவிகள் வழங்க ஓக்லஹோமா கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

English summary
A monstrous tornado of rare power roared through an Oklahoma City suburb, killing at least 51, flattening neighborhoods with winds up to 200 mph (320 kilometers) and destroying at least one school. Officials said children were among the dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X