For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவரஸ்ட் சிகரத்தில் ஏறி டேராடூன் இரட்டை சகோதரிகள் புதிய சாதனை

By Siva
Google Oneindia Tamil News

காத்மண்டு: டேராடூனைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி பசாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் எவரஸ்ட்டில் ஏறிய முதல் இரட்டையர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

எவரஸ்ட் சிகரத்தில் முதன்முதலாக ஏறிய இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் டென்சிங் நார்கே. அவர் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரியுடன் சேர்ந்து கடந்த 1953ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தில் ஏறினார். அதை உலகமே வியந்து பார்த்தது.

இதையடுத்து பலர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி வருகின்றனர். எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற துடிப்பு பலருக்கும் உள்ளது. இந்நிலையில் இரட்டை சகோதரிகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளனர்.

டேராடூன் சகோதரிகள்

டேராடூன் சகோதரிகள்

டேராடூனைச் சேர்ந்த டஷி(21) மற்றும் நான்சி மாலிக்(21) ஆகிய இரட்டைச் சகோதரிகள் நேற்று 8,848 மீட்டர் உயர எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். இதன் மூலம் எவரஸ்ட்டில் ஏறிய முதல் இரட்டையர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.

எவரஸ்ட்டில் சவூதி பெண்

எவரஸ்ட்டில் சவூதி பெண்

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் சவூதி பெண் என்ற பெருமையை ரஹா மொஹாரக்(25) பெற்றுள்ளார். அவரும் இந்த இரட்டை.யர்களுடன் தான் எவரஸ்ட்டில் ஏறியுள்ளார்.

10 நாட்களில் 348 பேர்

10 நாட்களில் 348 பேர்

எவரஸ்ட்டில் நல்ல தட்பவெட்ப நிலை இருப்பதால் நேற்று 146 பேர் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். மேலும் 94 பேர் இன்று சிகரத்தின் உச்சியை அடைகின்றனர். இவர்களைச் சேர்த்து கடந்த 10ம் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் 348 பேர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

English summary
Two Indian girls have scripted history by becoming the first twins ever to climb Mount Everest together. 21-year-old Tashi and Nancy Malik from Dehra Dun achieved this feat by successfully reaching the world's highest mountain peak at 8,848 meters, an official at Nepal's Ministry of Tourism and Culture said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X