For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டை உலுக்கிய சி.ஏ.ஜி. தலைவர் வினோத் ராய் 'ரிட்டையர்'.. புதிய தலைவராக சசிகாந்த் சர்மா!

By Mathi
Google Oneindia Tamil News

Vinod Rai retires after redefining CAG’s role
டெல்லி: நாட்டை உலுக்கிய காமன்வெல்த் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டு விவகாரங்களை வெளிப்படுத்திய மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் தலைவர் வினோத் ராய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பதிலாக சசிகாந்த் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வினோத் ராயின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து ராணுவ அமைச்சக செயலரான சசிகாந்த்தை அந்த பொறுப்புக்கு நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அவருக்கு நாளை பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

சசிகாந்த் சர்மா, 6 ஆண்டுகாலத்துக்கு அல்லது 65 வயது வரை இப்பதவியில் நீடிப்பார். அதே நேரத்தில் கணக்கு தணிக்கைத்துறை தலைவராக சசிகாந்த் சர்மா நியமிக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பலவீனமான மனிதர்களை நியமிப்பதன் மூலம் கணக்கு தணிக்கைத்துறையையே மத்திய அரசு பலவீனப்படுத்திவிட்டது என்கிறார் பிரசாந்த் பூஷண்.

English summary
Comptroller and Auditor General Vinod Rai, who demits office Wednesday, will be remembered for turning the statutory body into a pugnacious watchdog of good governance and administrative integrity at a time when India is experiencing the need for greater transparency and a rebalancing of power that has tilted over the years towards the executive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X