For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் 'ஓசி' டிவியை 'எலி' கடிச்சு...போச்சு ரூ4 கோடி: சிஏஜி அறிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

CAG raps Tamil Nadu for Rs 4-cr loss due to damaged TV sets
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் தொலைக்காட்சிகள் குடோன்களிலேயே கிடப்பில் போடப்பட்டதால் ரூ4 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய கணக்கு தணிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

திமுக ஆட்சிக்கால இலவச திட்டங்களில் வண்ண தொலைக்காட்சி வழங்குதலும் முக்கியமானது. இதற்காக திமுக ஆட்சிக் காலத்தில் 1.65 கோடி தொலைக்காட்சிகள் ரூ3,907 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டன. இது 6 கட்டங்களாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ரூ22. 82 கோடி மதிப்பிலான 95,725 தொலைக்காட்சிகள் வெவ்வேறு குடோன்களில் 16 முதல் 29 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தன. இவை கடைசி கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய கணக்கு தணிக்கைத் துறை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. ஆனால் டிசம்பர் மாதம் வரை தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் தணிக்கை துறைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இப்படி குடோன்களில் வைக்கப்பட்டவற்றில் 20,106 தொலைக்காட்சிகள் முற்றாக சேதமடைந்து செயலிழந்துவிட்டன. குடோன்கள் மேற்கூரை வழியே மழை நீர் உள்ளே புகுந்ததாலும், எலி போன்றவை தொலைக்காட்சிகளின் முக்கிய பாகங்களை கடித்து குதறியதாலும் இந்த தொலைக்காட்சிகள் செயல் இழந்துவிட்டன. இதனால் தமிழக அரசுக்கு ரூ4 கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை.

English summary
The previous DMK regime may have gained political mileage over a 2006 pre-poll promise to distribute free colour television sets to people. But, what's strained the coffers further is the loss of public money of more than Rs 4 crore due to damage of several thousands of TV sets kept in godowns, awaiting distribution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X