For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க க்ரீன்கார்டு, விசா சீர்திருத்த மசோதாவுக்கு சட்ட கமிட்டி அங்கீகாரம்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க விசா, க்ரீன்கார்டு சீர்திருத்த மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட கமிட்டியில் விவாதிக்கப் பட்டு வந்த்து.

கேங்க் ஆஃப் எய்ட் (Gang of Eight) என்று சொல்லப்பட்ட இரு கட்சிகளையும் சார்ந்த எட்டு செனட்டர்களால் வடிவமைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பித்து, விவாதிக்கப்ப்ட்ட பின் 300 திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

செனட் சபை வாக்கெடுப்பு

முக்கியமாக 11 மில்லியன் சட்டபூர்வமற்ற குடிமக்களுக்கு குடியுரிமை (வாக்குரிமை உட்பட) வழங்கும் மசோதாவை நிறைவேற்ற அதிபர் ஒபாமா உறுதியாக இருக்கிறார்.

சட்ட கமிட்டியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மசோதா, ஜூன் முதல் வாரம் வாக்கில் செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்படும் என தெரிகிறது. அடுத்ததாக காங்கிரஸ் சபையில் மசோதா வெற்றி பெறுமா என்ற கேள்விகளும் கூடவே எழுந்துள்ளன.

குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் சபையில் சட்டபூர்வமற்ற முறையில் குடியேறிவர்களுக்கு குடியுரிமை வழஙகக் கூடாது என பெருவாரியான கருத்துக்கள் நிலவுகின்றன. மசோதாவின் முக்கிய அம்சம் என்பதால் இறுதியில் நிறைவேறுமா அல்லது காங்கிரஸ் சபையில் தோற்கடிக்கப்பட்டு விடுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

ஹெச் 1 விசா அதிகரிப்பு

இந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் 65 ஆயிரம் என உள்ள ஹெச்1 பி விசா எண்ணிக்கை 110 ஆயிரமாகவும், தேவை அதிகமாக இருக்கும் ஆண்டுகளில் 180 ஆயிரம் வரையும் உயர வகை செய்யப்படுகிறது.

மேலும் க்ரீன்கார்டு என்றழைக்கப்படும் நிரந்தர விசா வழங்கும் முறையிலும் ஏராளமான மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் க்ரீன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து பத்து வருடம் வரையிலும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிட்த்தக்கது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நிறைவேறினால் அது பெரும்பாலான இந்தியர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

அதே வேளையில் கெடுபிடியான ஹெச் 1 பி கட்டுப்பாடுகளினால் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ், காக்னிசண்ட் உட்பட்ட் பெரும் ஐடி நிறுவனங்களுக்கு பல சோதனைகள் காத்திருக்கின்றன.

ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

English summary
A sweeping immigration bill that would offer a chance of citizenship to millions living in the US illegally has taken a stride forward in Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X