For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானது: செளதி மத குரு

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று செளதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

செளதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவரது ட்வீட்,

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சியை பயன்படுத்துவது அவர்கள் வீட்டில் இருப்பதை பிறர் கவனிக்கக்கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் சன்னி முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பெண்கள் கற்பழிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A man claiming to be Salafist-Wahhibist cleric posted on Twitter that if women turn on air-conditioners at home in their husband's absence it could lead to moral depravities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X