For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பானேஷ் மூர்த்தியுடன் உறவு வைத்திருந்த ஐகேட் பெண் ஊழியர் கர்ப்பம்.. மூர்த்தியின் சிசுவை சுமக்கிறார்!

By Chakra
Google Oneindia Tamil News

Araceli Roiz allegedly pregnant with Phaneesh Murthy's child
பெங்களூர்: ஐகேட் சாப்ட்வேர் நிறுவன முன்னாள் தலைவர் பானேஷ் மூர்த்தி மீது செக்ஸ் தொல்லை குற்றச்சாட்டு கூறிய பெண், அவரால் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், மூர்த்தியின் சிசுவை சுமந்து வருவதாகவும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐகேட் நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவின் தலைவரான அரசெலி ராய்ஸ், தனது பாஸ் ஆன பானேஷ் மூர்த்தி தனக்கு செக்ஸ் தொல்லை தந்து வருவதாக கூறிய குற்றச்சாட்டையடுத்து, விசாரணை நடத்திய ஐகேட் நிறுவனம், மூர்த்தியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.

இந் நிலையில் நிருபர்களை சந்தித்த மூர்த்தி, இது பணம் பறிக்க நடக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினார். மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவில் பணியாற்றியபோது தன் மீது செக்ஸ் குற்றச்சாட்டை சுமத்திய இன்னொரு பெண்ணுக்காக (ரேகா மேக்சிமோவிச்) ஆஜரான அதே வழக்கறிஞர்கள் தான் இப்போது அரசெலி ராய்சுக்காகவும் ஆஜராவதாகவும் கூறியிருந்தார்.

(ரேகாவுக்கு 3 மில்லியன் டாலர்களைக் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சனையைத் தீர்த்தது இன்போசிஸ் என்பது தனிக்கதை)

இந் நிலையில் ராய்சின் வழக்கறிஞர்களான Aiman-Smith & Marcy சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராய்ஸின் பாஸ் என்ற போர்வையில் பானேஷ் மூர்த்தி அவரைத் தவறாகப் பயன்படுத்தினார். அவருடன் தொடர்ந்து உறவை வைத்துக் கொண்டார். இதனால் ராய்ஸ் கர்ப்பமானார். ஆனால், கர்ப்பத்தைக் கலைக்குமாறு பானேஷ் மூர்த்தி கூறினார். இதை ராய்ஸ் ஏற்கவில்லை. இதையடுத்து ராய்ஸை ஐகேட் நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற பானேஷ் மூர்த்தி முயன்றார்.

இதைத் தொடர்ந்து ராய்ஸ் தனது வழக்கறிஞர்கள் மூலம் ஐகேட் நிறுவனத்துக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்தே பானேஷ் மூர்த்தியும் தனக்கு ராய்சுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக ஐகேட் நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நாங்கள் ராய்ஸ் சார்பில் பானேஷ் மூர்த்தி மீதும் ஐகேட் நிறுவனத்தின் மீதும் சட்ட நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பானேஷ் மூர்த்தியிடம் போர்பஸ் இந்தியா பத்திரிக்கை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, எல்லா பிரச்சனைகளுக்கும் இரு வேறு பக்கங்கள் உள்ளன. இப்போது விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்வதால் நான் கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் ராய்ஸ் இப்போது மெடிக்கல் லீவில் உள்ளதாக ஐகேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பானேஷ் மூர்த்தி இப்போது கலிபோர்னியாவில் பிரமெளன்ட் நகரில் உள்ளார். அங்கிருந்தபடி ஐகேட் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இங்கு தான் ராய்ஸ் இவருக்குக் கீழே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ராய்ஸ் கர்ப்பமானதாகவும் இதையடுத்தே பானேஷ் மூர்த்திக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இருவருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக தவறான உறவு இருந்து வந்துள்ளது.

இந்த உறவில் இருந்து ராய்ஸ் விலக முயன்றதாகவும், ஆனால், இதையடுத்து அவருக்கு பணிரீதியில் பானேஷ் மூர்த்தி தொல்லை தந்ததாகவும், வேலைக்கே உலை வைக்க முயன்றதாகவும், இதனால் தான் மூர்த்தியுடன் வேறு வழியின்றி ராய்ஸ் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்ததாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பானேஷ் மூர்த்தி மீது கலிபோர்னியா மாகாண சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

English summary
Phaneesh Murthy was asked to leave iGate because Araceli Roiz, the company’s head of investor relations, was allegedly pregnant with his child, and the Fremont, California-based IT firm faced the risk of a multi-million dollar lawsuit. Murthy told the iGate board of his relationship with Roiz only after she informed him that she will be taking legal action against him, Roiz’s legal firm Aiman-Smith & Marcy said in a statement released early this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X