For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்: கொல்கத்தாவில் பிரபல புக்கீ உள்பட 9 பேர் கைது

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கொல்கத்தாவில் பிரபல தரகர் உள்பட 9 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

IPL 6
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா மற்றும் தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகனும் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மெய்யப்பனிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் பிரபல தரகர் அஜீத் சுரேகா உள்பட 9 தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 8 செல்போன்கள் மற்றும் பெட்டிங் செய்வதற்கான சாப்ட்வேர் உள்ள 2 லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

English summary
The Kolkata Police arrested nine bookies, including a known bookie Ajit Surekha, in connection to the ongoing spot-fixing scandal in the Indian Premier League (IPL). All the arrested will be produced in a court later in the day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X