For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓக்லஹாமா சூறாவளியை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்ட 2 வாலிபர்கள்

By Siva
Google Oneindia Tamil News

ஓக்லஹாமா: அமெரிக்காவின் ஓக்லஹாமாவை புரட்டி எடுத்த சூறாவளியை இரண்டு வாலிபர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஓக்லஹமா மாகாணத்தை சூறாவளி தாக்கியது. சுழன்றடித்த சூறாவளிக்கு 10 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக பலியாகினர். கடந்த திங்கட்கிழமை சூறாவளி தாக்கியபோது சார்லஸ் காட்போர்ட்(19) என்ற வாலிபர் தனது நண்பர் அலெக்ஸ் ரோட்ரிகஸின்(19) வீட்டில் இருந்தார்.

அப்போது சூறாவளி வீசியதை அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் செல்போன்களில் பதிவு செய்தனர். அந்த வீடியோவை யூடியூப்பில் அப்லோட் செய்தனர். அதை இதுவரை 280,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இது குறித்து ரோட்ரிகஸின் தாய் அமாண்டா கூறுகையில், 19 வயது வாலிபர்கள் கிறுக்குத் தனமாக ஏதாவது செய்வார்கள். நான் மட்டும் அப்போது வீட்டில் இருந்திருந்தால் அவர்களை வீடியோ எடுக்க விட்டிருக்க மாட்டேன் என்றார்.

English summary
Two youngsters took video of the tornado that devastated Oklahoma on monday using their cellphones. That video has got more than 280,000 views in youtube.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X