For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை அணியின் ஓனர் குருநாத் அல்ல: இந்தியா சிமெண்ட்ஸ்! ஐடி கார்டில் ஓனர்தான்- லலித மோடி!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஐபிஎல் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி இருக்கும் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரோ அல்லது தலைமை செயல் அதிகாரியோ இல்லை என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் லலித் மோடியோ சென்னை அணியின் ஓனர் அவர்தான் என்று 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியிக்கான குருநாத் மெய்யப்பன் பாஸ் படத்தை வெளியிட்டுள்ளார்.

Gurunath meiyappan

ஐபிஎல் பிக்ஸிங் சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்து போலீசாரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது மும்பை போலீஸிடம் ஆஜராக குருநாத் மும்பை சென்றுள்ளார். குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி எனக் கூறப்பட்டதால் குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமானால் ஐபிஎல் போட்டிகளில் இருந்தே சென்னை அணி நீக்கப்படக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந் நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் திடீரென இன்று மாலை சில திருத்தங்களையும் செய்துள்ளார் மெய்யப்பன். சென்னை அணியின் முதன்மைத் தலைவர் என்பதை எடுத்துவிட்டார் மெய்யப்பன்.

இந்த நிலையில் திடீரென சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இன்று மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஊடகங்கள் குற்ப்பிடுவது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் அல்லது தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பன் என்பது தவறானது. அவர் உரிமையாளரும் அல்ல... தலைமை செயல் அதிகாரியும் அல்ல...அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகக் குழுவின் கவுரவ உறுப்பினர் மட்டுமே. ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அளிக்கும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை மறுத்திருக்கிறார் வெளிநாட்டுக்கு தப்பி தலைமறைவாக இருக்கும் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி. அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது குருநாத் மெய்யப்பனுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி பாஸ் படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் டீம் ஓனர் என்றுதான் அந்த பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒருவேளை அது அப்ப.. இது இப்ப என்று இந்தியா சிமெண்ட்ஸ் இன்னொரு விளக்கம் கொடுக்குமோ?

English summary
India Cements issues a statement clarifying that Gurunath Meiyappan is neither the owner, nor CEO/Team Principal of Chennai Super Kings. "Mr Gurunath is only one of the members (Honorary) of the Management Team of Chennai Super Kings. India Cements follows zero tolerance policy and if anyone is proved guilty, strict action will be taken immediately. India Cements assures full co-operation with BCCI and the Law Enforcement authorities," says the statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X