For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யா அருகே கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ரஷ்யா அருகே இன்று கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கே வட பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

எஸ்ஸோ நகரின் தென்மேற்கில் இருந்து 360 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஓகோட்ஸ்க் கடலுக்கு அடியில் ஏற்பட்டது. சுமார் 601.80 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பயங்கர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கு கடற்கரை மற்றும் அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யாவின் சகாலின் பகுதி மற்றுல் குரில் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதன் அதிர்வுகள் மாஸ்கோ, சைபீரியா உள்ளிட்ட ரஷ்யாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

English summary
An 8.2-magnitude earthquake under the Sea of Okhotsk was recorded early Friday, the US Geological Survey said. The temblor was at a depth of 601.80 km, reported Xinhua.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X