For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருநாத் கைது... மாமனார் சீனிவாசனை வெளியேற்ற லாபி செய்யும் போட்டி கோஷ்டி!

By Mathi
Google Oneindia Tamil News

Srinivasan
சென்னை: ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங் கட்டி விளையாடியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரது மாமனரான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எழுந்த கோரிக்கை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குருநாத் மெய்யப்பன், சீனிவாசனின் மருமகன். அவர் பாலிவுட் நடிகர் வின்துவுடன் தொடர்பு வைத்திருந்ததும் பெட்டிங் கெட்டி சிறைக்குப் போவதும் மருமகனின் விவகாரம். இதில் குருநாத் பெயர் அடிபட்டதுமே சீனிவாசன் தமது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று சில குரல்கள் எழுந்தன.

இப்படி குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் 'ஓடுகாலி' லலித் மோடி. இந்தியாவில் பல முறைகேடுகளில் சிக்கியதால் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாக இருந்து வரும் லலித் மோடிதான் யோக்கியரைப் போல ரொம்பவே அழுத்தமாக குரல் கொடுத்து வருகிறார். இந்த தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கும் யோக்கிய சிகாமணியைத்தான் சில வட இந்திய தொலைக்காட்சிகள் முன்னிறுத்தி சீனிவாசனை வெளியேற்ற துடிக்கின்றன.

ஓடுகாலி லலித் மோடி கூச்சல் எழுப்புவதை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் வட இந்திய ஊடகங்கள் மற்றொரு அரசியல் கட்சியை முன்னிறுத்துகிறது. அது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இது சரத்பவாரின் கட்சி.. இந்த சரத்பவாரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தவர்தான். அவருக்கு சீனிவாசன் மீது இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள இதுதான் சந்தர்ப்பம் என பார்க்கிறார். அதனால்தான் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

சீனிவாசன் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று எந்த ஆதாரமும் இதுவரை சொல்லப்படாத நிலையில் அதற்காக அவரை பலி கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றன சில சக்திகள்.. சில வட இந்திய ஊடகங்களும் இதற்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால் இவர்கள்தான் உச்ச நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்ட சஞ்சய்தத்துக்கு 'கருணை'' காட்ட வேண்டும் என்று கோருகிறார்கள்..

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீனிவாசனும், என் மருமகன் மூலமாக என்னை குறி வைத்தே சிலர் செயல்படுகின்றனர். இத்ற்காக நான் ராஜினாமா செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே கூறியிருப்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

English summary
After the arrest of his son-in-law for allegedly betting in the on-going edition of the Indian Premier League (IPL), pressure is mounting on BCCI chief N Srinivasan to step down. Speaking to TV media, Mr Srinivasan said this is an attempt to target him through his son-in-law. "I have done nothing wrong. There is no question of my resigning. My conscience is clear," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X