For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் குமரி இளைஞரின் இசைக்குறும்படம்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் குமரி மாவட்ட இளைஞரின் இசைக் குறும்படம் திரையிடப்படுகிறது.

அமெரிக்காவில் இயங்கி வரும் சைபர்ஹம் எனும் அமைப்பு 1995ம் ஆண்டு எரிக் மான்ட்கோமரி என்பவரால் துவங்கப்பட்டு ஆண்டுதோறும் இசை மற்றும் கலைத் துறையைச் சேர்ந்த சிறந்த படைப்புகள் திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் திரையிட பல்வேறு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த அப்துல் ஹலீம் என்பவரது தி பீட் வேர்ல்ட் எனும் இசைக் குறும்படமும் அடக்கம்.

தி பீட் வேர்ல்ட் எனும் இசைக் குறும்படம் இந்தியாவின் கடம், மேற்கு ஆப்பிரிக்காவின் ஜெம்பே, அரேபியாவின் டாம்பரின், கஞ்சிரா, ஐரோப்பாவின்
வயலின் போன்ற இசைக்கருவிகள் மற்றும் தேங்காய் சிரட்டை, கப் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் இசையை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதாகும். இக்குறும்படத்தை உருவாக்கியுள்ள அப்துல் ஹலீம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசையில் பட்டம் பெற்றதுடன், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், தஞ்சை தமிழ் பல்கலையில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார்.

கடம், டாம்பரின், ஜெம்பே, செண்டை ஆகிய இசைக் கருவிகளை இசைத்து 6 உலக சாதனைகளை படைத்துள்ளார். இவரது மாணவர்கள் 17 பேரை உலக சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளார். தமிழக அரசின் கலை வளர்மணி, பாரதி யுவகேந்திராவின் சுவாமி விவேகானந்தா, குமரி கலைக் கழகத்தின் நாதலய மணி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள இவர் அகில இந்திய வானொலி நிலையத்தின் 'ஏ' கிரேடு வித்வான் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

English summary
Abdul Haleem, a Kanyakumari based youth's musical short film titled 'The beat world' has been selected to be screened at the US international film festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X