For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிர் உணரும் கருவியாகும் ஸ்மார்ட் போன்: புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஸ்மார்ட் போனில் ஒரு புதுமையாக நோய்க்கிருமிகளை கண்டறியும் ஒரு புதிய மென் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் விரலாய் மாறிவிட்ட செல்போனில் நன்மைகள் பல... தீமைகளும் பல...

செல்போன்களைப் பயன் படுத்துவதால் பல நோய்கள் வர வாய்ப்பிருப்பதாகத் தானே இதுவரை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது மொபைல் போன் மூலமாகவே பல நோய்களைக் கண்டறியும் வகையில் புதுமையான மென்போருளை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்...

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்...

இந்த மென்பொருள் அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தில் உள்ள இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உயிர் உணரும் கருவி...

உயிர் உணரும் கருவி...

இந்த மென்பொருள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை உயிர் உணரும் கருவியாக பயன்படுத்தி சுற்றுச்சூழலில் உள்ள நச்சுக்கள், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கண்டறியும் திறன் கொண்டது.

சோதனை முயற்சி...

சோதனை முயற்சி...

இதன் மூலம் தற்காலிக கள மருத்துவமனைகளில் சோதனைகளையும், உணவுப் பொருட்களின் மாசுகளையும் மிகக் குறைந்த செலவில் உடனடியாக கண்டறியலாமாம்.

நோய்க் கிருமிகளைக் கண்டறியலாம்...

நோய்க் கிருமிகளைக் கண்டறியலாம்...

இந்த மென்பொருள் உதவியால் நிலத்தடி நீரில் உள்ள நோய்க்கிருமிகளைக் கூட கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
Researchers have developed a new smartphone app that uses the mobile's built-in camera and processing power as a biosensor to detect toxins, proteins, bacteria, viruses and other molecules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X