For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீஸ் ரெய்டு!

By Shankar
Google Oneindia Tamil News

Mumbai police raid Gurunath Meiyappans residence
சென்னை: கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பனின் சென்னை போட் கிளப் பகுதி வீடு மற்றும் அவர் தொடர்பான அத்தனை இடங்களிலும் மும்பை போலீசார் நேற்று முழுவதும் தொடர் சோதனை நடத்தினர்.

மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட போலீஸ் குழு, ஞாயிற்றுக்கிழமை குருநாத் வீட்டில் சோதனை நடத்தியது.

குருநாத்தின் வீட்டுக்கு வந்து போனவர்கள் யார் யார் என காவலரிடம் இருந்த பதிவேடுகளை வாங்கி ஆராய்ந்தனர். காவலர்களிடமும் வீட்டிலிருந்தவர்களி்டம் விசாரணை நடத்தினர்.

மேலும் குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களிலும் சோதனை நடத்தினர்.

குருநாத் நிர்வாக இயக்குநராக உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

குருநாத் தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மே 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

English summary
A Mumbai police team Sunday raided the house of Gurunath Meiyappan, the team principal of Chennai Super Kings (CSK) and son-in-law of Indian cricket boards chief N.Srinivasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X