For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் இனி பயிற்சி கிடையாது: ஏ.கே.அந்தோணி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தமிழகத்தில் இனி இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவிலேயே முதன்மை விமானப்படை தளமான தஞ்சை விமானப்படைத்தளத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி இன்று துவக்கி வைத்தார். இந்த விமானப்படைத்தளம் சுமார் ரூ. 150 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. அந்தோணி,

இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அதே நேரத்தில் எவ்விதமான சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. ராணுவத்துறையில் தற்போது மிகவும் வலிமையான நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள 48 நாடுகள் நம்முடன் பேசி வருகின்றன. இதற்காக, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இங்கு இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என உறுதியளிக்கிறேன்.

இந்திய எல்லையில் சீனப்படைகள் ஊடுருவல் பிரச்னை குறித்து, இந்தியா வந்த சீனப்பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரிடம் விரிவாக பேசப்பட்டது.

மேலும் ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறிய அவர், சட்டீஸ்கருக்கு ராணுவத்தை அனுப்பும் திட்டங்கள் இல்லை. போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரே அங்கு நிலைமைகளை சமாளிப்பர். ஆனால் மாநில அரசுக்கு தேவையான உதவிகளை ராணுத்தின் சார்பில் மறைமுறைமாக செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

English summary
There is no proposal to deploy Army in the Maoist-hit states, defence minister A K Antony said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X