For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஜிகிஸ்தானில் மீண்டும் ‘யூ ட்யூப்’ற்குத் தடை

Google Oneindia Tamil News

துஷான்பி: தஜிகிஸ்தானில் மீண்டும் யூ ட்யூப் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடை தொலைத்தொடர்புத் துறையினரின் உத்தரவின் பேரில் இந்தத் தடை அமுல் படுத்தப் பட்டிருப்பதாக தஜிகிஸ்தானின் இணையதள சேவை வழங்குநர்கள் சங்கத் தலைவர் அசோமிடின் அடோயி தெரிவித்துள்ளார்.

இந்தத் உத்தரவு ஈமெயில் அல்லது கடிதம் மூலமாக மற்ற சேவை வழங்குநர்களுக்கு அனுப்பி வைக்கப் படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ல் நடைபெற்ற தஜிகிஸ்தான் அதிபரின் மகன் திருமணம் சம்பந்தமான காட்சிகள் மே 18 அன்று யூ ட்யூபில் வெளியானது. இதில் அதிபரின் நடனம் மற்றும் பாடல் காட்சிகளும் அடக்கம். எனவே, இது கூட தடைக்கான ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த வருடம் ஜூலை மற்றும் அக்டோபர் மாதத்தில் யூ ட்யூப் தடை செய்யப்பட்டது. பின் மீண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரம் தடை செய்யப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக இத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தஜிகிஸ்தானில் மொத்த ஜனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இண்டர் நெட் பயன் படுத்துகிறார்கள். ஆனால், இத்தடைக்கான காரணத்தை வெளியிட அரசு மறுத்துவிட்டது.

English summary
DUSHANBE: Tajikistan has blocked YouTube for the third time in less than a year without an official explanation, a representative of the country's internet industry said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X