For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோயால் அவதிப்படும் கொள்ளுப் பேரனுக்கு நிதி திரட்ட பாராசூட்டில் இருந்து குதித்த 87 வயது தாத்தா

By Siva
Google Oneindia Tamil News

87-year-old Ohio man jumps to aid great-grandson
வாஷிங்டன்: ஒஹாயோவைச் சேர்ந்த 87 வயது முதியவர் நுரையீரல் கோளாறால் அவதிப்படும் தனது 10 மாத கொள்ளுப்பேரனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் தென்மேற்கு ஒஹாயோவில் உள்ள ஃபேர்பீல்டைச் சேர்ந்தவர் கிளாரன்ஸ் டர்னர்(87). இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட விமானப்படை வீரர். அவரது 10 மாத பேரக்குழந்தை ஜூலியான் கவுச். ஜூலியானுக்கு நுரையீரல் கோளாறு உள்ளதால் கொலம்பஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது.

பேரனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட கிளாரன்ஸ் கடந்த சனிக்கிழமை பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார். முன்னதாக அவர் தன்னுடைய 85வது வயதில் பாராசூட்டில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு அவர் 1944-47ல் ராணுவ வீரராக இருக்கையில் ஜப்பானில் கடைசியாக பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார்.

English summary
Clarence Turner, an 87-year old World War II veteran jumped from a parachute in an effort to attract attention for the plight of his ailing 10 month old great grandson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X