For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

400 ஆண்டுகளுக்குப் பிறகு, பனி விலகியதால் புத்துயிர் பெற்ற அதிசய தாவரம்

Google Oneindia Tamil News

Plants revived after 400 years in ic
டொராண்டோ: கனடாவின் வடக்குப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அல்பர்ட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 400 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக கருதிய தாவரம் ஒன்று துளிர் விட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.

வடதுருவத்தில் அமையப் பெற்றிருக்கும் கனடாவின் வட பகுதியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிமலைகள் வெப்பமயமாதலின் விளைவாக உருகியது தெரிய வந்தது.

பனி மலைகள் உருகிய காரணத்தால், அப்பட்டமாக தெரிந்த தரைப்பகுதியில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர். ஆராய்ச்சியில் அவை 400 ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்கள் என்பதும், பனியால் உறைந்து போய் விட்டதும் கண்டறியப்பட்டது.

அவை முற்றிலும் அழிந்து போயிருக்கும் என எண்ணிய விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் விட்டனர். காரணம் பனி விலகியதால் தற்போது புத்துயிர் பெற்றிருக்கின்றன அத்தாவரங்கள்.

இதனைக் குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

English summary
Plants that managed to re-grow after centuries buried under Arctic glaciers could prove useful for would-be pioneers hoping to explore life on other planets, research from a team of Canadian scientists has found
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X