For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயற்கை விவசாயி நம்மாழ்வார் ஜூன் 14-ல் உண்ணாவிரதம்!

By Shankar
Google Oneindia Tamil News

Agriculturist Nammazhwar announces protest against Union Govt
தஞ்சை: காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி இயற்கை விவசாயி நம்மாழ்வார் வரும்த ஜூன் 14-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

காவிரி நீர் பாசன பகுதிகளான திருவிடைமருதூர், கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன் எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து கும்பகோணத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இத்திட்டத்தை அனுமதித்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்ப்படும் என்பதால், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் சுமார் ஒரு லட்சத்துக்கு 70 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தன் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 14ஆம் தேதி மன்னார்குடியில் உண்ணாவிரதமும், 22ஆம் தேதி காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று நம்மாழ்வார் அறிவித்துள்ளார்.

English summary
Natural Agriculturist Nammazhwar announced protest against Union govt's plan to extract methene gas in Cauvery Delta region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X