For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைல் நதியில் அணை கட்டும் எத்தியோப்பியா! எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாயை மூடும் எகிப்து!

By Mathi
Google Oneindia Tamil News

Egypt can use Suez Canal to retaliate Ethiopia dam move'
கெய்ரோ: உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியா நாடு அணை கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாய் வழியே போக்குவரத்தை தடை செய்ய முடிவெடுத்திருக்கிறது எகிப்து.

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் சர்வதேச நதியான நைல், 11 நாடுகளுக்கு பயனளிக்கிறது. குறிப்பாக எகிப்தும் சூடானும் நைல் நதியால் பெரும் பயனடைகின்றன. அதே நேரத்தில் எத்தியோப்பியாவோ மின் உற்பத்திக்காக புதிய அணை ஒன்றை கட்டப் போவதாக அறிவித்து நீரின் போக்கை திசை திருப்பவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எகிப்தும் சூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் இத்தாலி மற்றும் சீனாவின் ஆதரவுடன் எத்தியோப்பியா அணை கட்டும் முயற்சியை தொடர்கிறது. இப்படி சர்வதேச நாடுகளும் எத்தியோப்பியாவுக்கு உதவுவதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் சூயஸ் கால்வாய் வழியேயான போக்குவரத்தை தடை செய்ய எகிப்து தீர்மானித்துள்ளது. இதனால் சர்வதேச நீர்வழிப் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.

English summary
Egypt could close the strategic Suez Canal to ships from countries like China that are helping Ethiopia build a controversial dam that threatens supply of Nile water to the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X