For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவு பாதுகாப்பு மசோதாவுக்காக பார்லி. சிறப்பு கூட்டம்- ஐமு கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை

By Mathi
Google Oneindia Tamil News

Food security
டெல்லி: உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறகிறது.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டலாம் என்பது மத்திய அரசின் கருத்து. இது தொடர்பாக ஆளும் கூட்டணி அரசின் ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இதே விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க 7-ந் தேதியன்று மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்ட இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
The UPA meets this evening to discuss how to introduce the Food Security Bill as quickly as possible. One option is to call a special session of Parliament to discuss what it hopes will be a flagship welfare reform. Another is to introduce the new law through an ordinance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X