For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Google Oneindia Tamil News

பாக்தாத்: சரியாக ஈராக் போர் நடந்து முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், போரில் உபயோகிக்கப்பட்ட வெடிகுண்டுகளின் தாக்கம் இன்னும் அங்கு தொடர்கிறது. ஒன்றும் அறியா இளம் தளிர்கள் பிறக்கும் போதே உடல் குறையுடனும், ரத்தப் புற்று நோய் போன்ற கொடிய நோயுடனும் பிறக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம்.

கடந்த 2003-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற போரில்,பெருமளவில் வெடிகுண்டுகள் பயன் படுத்தப்பட்டன். ஏறக்குறைய போர் நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், அதன் எதிர் விளைவுகள் தற்போது அங்கு வாழும் மனிதர்களையும், குறிப்பாக குழந்தைகளையும் வாட்டி வதைத்து வருகிஅது.

Iraq Birth defects

ஈராக்கில் பிறக்கும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் குறை காணப்படுகிறதாம். வளர்ந்து வரும் பல குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக வடக்கு ஈராக்கில் உள்ள நைன்வே மாகாணத்தின் 3 நகரங்களில் தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்த தகவலை மொசூல் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெடிகுண்டுகள் வீச்சின்போது, மண்ணில் கலந்த யுரேனியம் கதிர் வீச்சுகளால்தான் இதுபோன்ற புற்று நோய்களும், உடல் உறுப்பு பாதித்த குழந்தைகளின் பிறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.

ஈராக்கில் 1990-ம் ஆண்டும் நடந்த போருக்கு பின்னர் அங்கு பிறந்த 1 லட்சம் குழந்தைகளில் 4 பேர் மட்டுமே இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் இதுபோன்ற நோய் தாக்குதல் விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தற்போதைய விவரப்படி, தற்போது பிறந்த 1 லட்சம் குழந்தைகளில் 22 பேர் கொடிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற நோய்கள் எதிர்காலத்தில் பரவாமல் தடுக்க, தகுந்த ஆய்வுகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம் என ஈராக் நம்புகிறதாம்.

English summary
Ten years after the start of the U.S. invasion in Iraq, doctors in some of the Middle Eastern nation's cities are witnessing an abnormally high number of cases of cancer and birth defects. Scientists suspect the rise is tied to the use of depleted uranium and white phosphorus in military assaults.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X