For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெய்யப்பன் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டாரா?: அமலாக்கப் பிரிவு களமிறங்குறது!

By Chakra
Google Oneindia Tamil News

IPL spot fixing: ED asks cops to give details of Meiyappan case
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பனின் வழக்கு விவரங்களை தங்களிடம் தருமாறு மும்பை போலீசாரிடம் மத்திய அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) கோரியுள்ளது. மெய்யப்பன் அன்னிய செலாவணி மோசடி எதிலும் ஈடுபட்டாரா என்பது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரிக்கவுள்ளது.

மெய்யப்பனின் வழக்கு விவரங்களோடு வின்டு தாரா சிங்கின் வழக்கு விவரத்தையும் அமலாக்கப் பிரிவு கோரியுள்ளது.

இந்த வழக்கை மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை கையில் எடுப்பது குறிப்பிடத்தக்கது. மெய்யப்பன் மற்றும் வின்டு மீது Prevention of Money Laundering Act (PMLA) சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒவ்வொறு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மீதும் ரூ. 20 லட்சம் வரை பெட் கட்டியுள்ளார் மெய்யப்பன் என்கிறது மும்பை போலீஸ் வட்டாரம்.

மேலும் இந்த வழக்கில் ஸ்ரீசந்த் உள்ளிட்ட ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட 3 வீரர்களையும் அமலாக்கப் பிரிவு சேர்க்கும் என்று தெரிகிறது.

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஆதாரம் இருந்தால் இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவும் வருமான வரித்துறையும் நிச்சயம் தலையிட முடியும். போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ளது. சரியான நேரத்தில் இந்த இரு துறைகளும் இந்த விவகாரத்தில் தலையிடும் என்றார்.

English summary
The Enforcement Directorate has joined the probe into the IPL fixing scam and could bring more trouble for BCCI chief N Srinivasan's son-inlaw Gurunath Meiyappan and small-time Bollywood actor Vindoo Dara Singh. ED is set to send a letter to Mumbai Crime Branch, asking for all details and a copy of the FIR on the case against Meiyappan and Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X