For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமருக்கு இந்தியாவிலயும்,சீதைக்கு இலங்கையிலயும் கோவில் கட்டுவோம் : பாஜக

Google Oneindia Tamil News

MP BJP to construct Sita temple in Sri Lanka
குவாலியர்: விரைவில் மத்திய பிரதேசத்தில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடித்தால், சீதைக்கு இலங்கையில் கோயில் கட்டித் தருகிறோம் என தற்போதைய முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் அறிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து பாரதீய ஜனதாவின் ஆட்சிதான் மத்திய பிரதேசத்தில் நடை பெற்று வருகிறது. விரைவில் சட்ட மன்ற தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில், இம்முறையும் தாங்களே அரியணையில் அமர தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில், பிரசார வியூகங்கள் குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் மாநில பாஜ தலைவர்களின் 3 நாள் மாநாடு நேற்று முன்தினம் குவாலியரில் தொடங்கியது.

இதில் கலந்து கொண்ட சிவ்ராஜ் பேசியதாவது,

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதா தேவிக்கு கோயில் கட்டப்படும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ம.பி. வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் இதுதொடர்பாக பேசியுள்ளேன். இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதா தேவி தனது கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சையில் இறங்கினார். இந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்ட இலங்கை அதிபரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என தேசிய அளவில் பாஜக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
If the BJP comes back for a third term in Madhya Pradesh, the Shivraj Singh Chouhan government will construct a temple for Ggoddess Sita in Sri Lanka. The state BJP gathered for a three-day conclave in Gwalior to plan and strategise its election campaign and management in the next five months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X