For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்ப்பாலில் பாதணிகள்: புரதத்தை பிளாஸ்டிக்காக மாற்றி புது முயற்சி

Google Oneindia Tamil News

லண்டன்: தாய்ப்பாலில் புதுமையான பாதணிகளை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு ஆடை வடிவமைப்பாளர்கள்.

சமீபத்தில் கொண்டாடப்பட்ட ‘தாய்ப்பால் வாரத்தை கொண்டாடவே, இப்படி ஒரு புதுமையான முயற்சியில் இறங்கினார்களாம் இவர்கள்

தாயொருவரிடமிருந்து தாய்ப்பாலை தானமாகப் பெற்று இந்த சிறிய இரு பாதணிகளை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள்..

தாய்ப்பால் பாதணிகள்...

தாய்ப்பால் பாதணிகள்...

கிழக்கு சஸெக்ஸிலுள்ள பிரைட்டன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களாக பணி புரிந்து வரும் நிக் கன்ட் மற்றும் தன்யாடீன் , இருவரும் சேர்ந்து தான் இந்த தாய்ப்பாலைப் பயன்படுத்தி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.

பிளாஸ்டிக் புரதம்...

பிளாஸ்டிக் புரதம்...

தாய்ப்பாலிலுள்ள புரதத்தை கடினமான பிளாஸ்டிக் வகையாக மாற்றி இந்த சின்னஞ் சிறிய பாதணிகளை வடிவமைத்துள்ளனர்.

சின்ன ஷூ...

சின்ன ஷூ...

அளவில் மிகவும் சிறிய இந்த பாதணிகளை அணிய முடியாது.

தாய்ப்பால் ஆபரணம்...

தாய்ப்பால் ஆபரணம்...

ஏற்கனவே சில வடிவமைப்பாளர்கள் தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் மற்றும் ஆபரணங்கள் போன்றவை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோசிப்பீர்களா....

யோசிப்பீர்களா....

ஆனாலும், கன்று குடிக்க வேண்டிய பசு மாட்டுப் பாலை மனிதர்கள் குடிக்கக்கூடாது என சில சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துவரும் வேளையில், எத்தனையோ இளம் தளிர்கள் தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கின்ற சூழ்நிலையில், அதிக சத்துக்கள் நிறைந்த, போஷாக்கான, நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த தாய்ப்பாலை சிலர் இப்படியெல்லாம் வீணாக்குவது உண்மையில் மிகவும் வேதனையான விஷயமே. யோசிப்பீர்களா புதுமை புகுத்திகளே...

English summary
First we had breast milk ice cream. Then there was breast milk jewellery. And now pairs of tiny baby booties made from donated breast milk have been created by British designers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X