For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்சலைட்டுகளை சமாளிப்பது குறித்து இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

By Siva
Google Oneindia Tamil News

PM to chair all-party meeting on Naxal issue today
டெல்லி: நக்சலைட்டுகள் பிரச்சனையை சமாளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரிவர்த்தன் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியின்போது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 27 பேர் பலியாகினர். இந்நிலையில் நக்சலைட்டுகள் பிரச்சனையை சமாளிப்பது குறித்து இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்த யுக்திகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உரை நிகழ்த்துவார்.

இது குறித்த முடிவு கடந்த வாரம் பிரதமர் வீட்டில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Prime Minister Manmohan Singh has convened an all-party meeting in Delhi on monday to discuss ways to tackle Naxal menace in the backdrop of killing of Congress leaders in a Maoist attack in Chhattisgarh last month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X