For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து

By Siva
Google Oneindia Tamil News

jayalalitha and Narendramodi
சென்னை: பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் டெல்லியில் நடக்கும் மத்திய திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினார்.

முன்னதாக அவர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு,

நான் மத்திய திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது உட்கட்சி விவகாரம். இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் மோடி எனக்கு நல்ல நண்பர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்பொழுதுமே உண்டு. அவர் ஒரு சிறந்த நிர்வாகி. குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

English summary
TN CM Jayalalithaa congratulated Gujarat CM Narendra Modi for getting apoointed as the head of BJP poll panel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X