For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வலி நிவாரணி 'டெக்ஸ்ட்ரோப்ரோபாக்ஸிபீன்' மாத்திரைக்கு மத்திய அரசு தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Govt bans pain killer drug dextropropoxyphene
டெல்லி: வலி நிவாரண மாத்திரையினால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி அதனை உற்பத்தி செய்யவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.

டெக்ஸ்ட்ரோ ப்ரோபாக்ஸிபீன் (Dextropropoxyphene) என்ற பெயர் கொண்ட அந்த வலி நிவாரணி மாத்திரை 1957ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஹைபோ டென்சன், இதயவலி உள்ளிட்ட பல்பேறு பக்க விளைவுகள் ஏற்பட்டன. ஏராளமானோர் மரணத்தை தழுவியது கண்டறியப்பட்டது. இதனால் இந்த வலி நிவாரண மாத்திரையை பல நாடுகள் தடை செய்துவிட்டன.

பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கூறி உலகின் பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் தற்போது அதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இந்த மாத்திரையை விற்கவோ, உற்பத்தி செய்யவோ, வினியோகிக்கவோ கூடாது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட வலி நிவாரணிகள்

இதேபோல் சளி, இருமல் போன்றவற்றுக்கு கொடுக்கப்பட்ட பீனைல் புரப்பனோலெமைன்(பி.பி.ஏ.,), பல்வேறு வலிகளை போக்குவதற்காக கொடுக் கப்பட்டு வந்த "பெயின் கில்லர்' மருந்துகளான நைஸ், நிமுலிட் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் இரைப்பை நோய்களுக்கு கொடுக்கப்படும் இப்சிநார்ம், டிகாட், டிஜிப்ஸ், பாக்டீரியாவை அழிக்க அளிக்கப்படும் கெயிட்டி உள்ளிட்ட மருந்துகள் பக்க விளைவை ஏற்படுத்துகின்றன, என சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் தெரிவித்ததை அடுத்து அந்த மருந்துகளுக்கு கடந்த 2009ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Drug was under the scanner of authorities for quite sometime after it was banned in various countries, including the US and the UK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X