For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்போடியாவைக் கலக்கும் ‘மூங்கில் ரயில்’ பயணம்....

Google Oneindia Tamil News

பினோம்பென்: தெற்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் ரயிலில் பயணம் செய்வதற்காகவே அதிக சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்களாம். அப்படியென்ன ஸ்பெஷல் ரயில் என்கிறீர்களா?

உண்மையிலேயே இது சம்திங் ஸ்பெஷல் தான். விலை உயர்ந்த, ஆடம்பர வசதிகள் எதுவுமே இந்த ரயிலில் இல்லை. அவ்வளவு ஏங்க, ரயில்னு சொல்லிக்கறதுக்கு ஒரு பெட்டியோ, எஞ்ஜீனோ கோட கிடையாது. தண்டவாளத்தில் ஓடுவதனால் மட்டுமே இதனை ரயில் என ஒப்புக் கொள்ளலாம்.

ஓவர் பில்டப் உடம்பிற்கு ஆகாதுங்க., அதனால அது என்ன ரயிலுனா.... கம்போடியாவில் பொதுமக்களால உருவாக்கப்பட்ட ‘மூங்கில் ரயில்' தான் அது.

வரும்... ஆனா, வராது.

வரும்... ஆனா, வராது.

கம்போடியாவில் ரயில் சேவை ரொம்பவே மோசமாம். சரியான நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்தால் கூட பரவாயில்லை, ஆனால், ரஜினி சொன்னது போல் எப்ப வரும் எப்படி வரும் என்றே தெரியாதாம்.

பொங்கியெழுந்த மனோகராக்கள்...

பொங்கியெழுந்த மனோகராக்கள்...

பொறுமை கடலினும் பெரிது. ஆனால், கடலையும் தாண்டிய கம்போர்டியாவின் வட பகுதி மக்கள் அதிரடியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். நம்ம வ.உ.சி மாதிரி சொந்த ரயில் தயாரிச்சு ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

அவ்வளவு பெரிய அப்பாட்டக்கர்களா?

அவ்வளவு பெரிய அப்பாட்டக்கர்களா?

தங்கள் பொருளாதாரத்திற்கு தக்க ரயிலை உருவாக்க யோசனை செய்த மக்கள் கண்டுபிடித்தது தான் இந்த ‘மூங்கில் ரயில்'. மூங்கில்களால் பிணைக்கப்பட்ட பத்து பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி உடைய, ஒரு சிறிய கம்பார்ட்மென்ட்டை தங்களது சொந்த ஐடியாவில் உருவாக்கியுள்ளார்கள்.

தண்டவாளத்துல தான் ஓடும்...

தண்டவாளத்துல தான் ஓடும்...

தண்டவாளத்தில் ஓடும் வகையில், சிறிய சக்கரங்களின் மேல் அந்த அந்த மூங்கில் கம்பார்ட்மென்ட்டை இணைத்து, பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இஞ்சின் ஒன்றைப் பொருத்தி பச்சைக்கொடி காட்டி ரயிலை ஸ்டார்ட் செய்துவிட்டார்கள்.

விபத்து ஏற்படாமல் தடுக்க...

விபத்து ஏற்படாமல் தடுக்க...

எதிர்புறம் இருந்து மற்றொரு மூங்கில் ரயில் வந்தால், எந்த வண்டியில் குறைவான ஆட்கள் இருக்கிறார்களோ, அவர்களை வண்டியோடு தண்டவாளத்திலிருந்து தரை இறக்கி விடுவார்களாம். அதிக பயணிகளை கொண்ட வண்டி நகர்ந்த பின், மீண்டும் இந்த ரயிலை அசெம்பிள் செய்து பயணத்தை தொடங்கி விடுவார்களாம். இது இவர்களின் எழுதப்படாத விதியாம்.

அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைங்க...

அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைங்க...

இது உண்மையான ரயில் வருவதற்காக போடப்பட்ட தண்டவாளங்கள் தானே, ஒருவேளை நிஜமாகவே ரயில் வந்தால், மூங்கில் ரயில் என்ன ஆகும்? எனக் கவலைப்படாதீர்கள். உண்மையிலேயே ரயில் வந்தா, அப்புறம் ஏன் மூங்கில் வண்டி ரயில் தேவைப்படப் போகிறது அவர்களுக்கு.

செலவும் கம்மி...

செலவும் கம்மி...

பயணச்செலவு வெறும் இரண்டு டாலர்கள் தான் என்பதால், புல்லட் ரயில், மோனோ ரயில், மெட்ரோ ரயில் எனப் பலதரப்பட்ட ரயில்களில் பயணித்து அலுத்துவிட்ட வெளிநாட்டுக்காரர்களுக்கு, இந்த மூங்கில் வண்டிப் பயணம் மிகவும் பிடித்துப்போய் விடுகிறதாம்.

அது மட்டும் தான் மிஸ்ஸாகுது...

அது மட்டும் தான் மிஸ்ஸாகுது...

40 கி.மீ. வேகத்தில் ஓடும் இந்த மூங்கில் ரயிலில் ‘கூ....கூ...' சத்தம் மட்டும் தான் பெரிய மிஸ்ஸிங் பாஸூ.

English summary
Cambodia's second city of Battambang, have taken matters into their own hands. They have created their own rail service using pieces of bamboo and abandoned barbell like train wheels. The locals call the vehicles "Norries", but overseas visitors know them as "bamboo trains".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X