For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபத்தில் சிக்கிய பறக்கும் தட்டு: இது தான் வேற்றுகிரகவாசியின் சடலம்...: சீனாவில் பதற்றம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இது தான் வேற்றி கிரக வாசியின் அழுகிய சடலம் என ஐஸ் பெட்டியில் ஒரு விநோத உடலைக் காட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர்.

விண்ணில் சில பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி செய்திகள் உலா வருவது எல்லாம் பழைய கதை.

அடுத்தகட்டமாக, இது தான் வேற்றுகிரகவாசியின் போட்டோ, வீடியோ என ஒரு கும்பல் கிளம்பியது. இப்பொழுது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக, இது தான் வேற்றுக்கிரக வாசியின் சடலம் என திகில் காட்டியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர்.

என்கிட்ட புரூப் இருக்கு...

என்கிட்ட புரூப் இருக்கு...

சீனாவை சேர்ந்த லீ என்பவர் தான், தன்னுடைய வீட்டில் வேற்று கிரக மனிதனின் சடலத்தை பாதுகாத்து வருவதாக பதட்டத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு போட்டோ ஆதாரங்களை வேறு வெளியிட்டிருக்கிறார் லீ.

ஆத்தங்கரையில் ஒரு அறிவாளி

ஆத்தங்கரையில் ஒரு அறிவாளி

சீனாவின் பின்சூ ஷாங்டாங் மாகாணத்தின் வழியாக ஓடும் மஞ்சள் ஆற்றின் கரையோரம் வசிப்பவர் தான் லீ. வேற்று கிரகவாசியின் அழுகிய சடலத்தை ஐஸ்பெட்டியில் வைத்திருப்பது போன்ற புகைப்படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார் இவர்.

நிஜமாலுமேவா....

நிஜமாலுமேவா....

இதுகுறித்து லீ கூறுகையில், 'கடந்த மார்ச் மாதம் ஆற்றங்கரையோரம் செல்கையில், வானத்தில் மர்மமான முறையில் பறக்கும் தட்டுகள் சென்றன. அதில் ஒன்று கீழே விழுந்ததில், மின்சார கம்பியில் பட்டு பற்றி எரிந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்த போது, மனிதன் மாதிரியே பிணம் கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளேன்' எனத் தெரிவித்தார்.

என்னமா கிளப்புறாய்ங்கய்யா..பீதிய

என்னமா கிளப்புறாய்ங்கய்யா..பீதிய

தகவலறிந்த போலீசார் லீயின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாகப்பட்டது, நம்ம லீ சார், சரியான புரூடா மாஸ்டராம். இது குறித்து போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 'வேற்று கிரக வாசி போன்று ரப்பரில் பொம்மை செய்து வைத்துள்ளார் லீ. எனவே, இதுபற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை' என தெரிவித்துள்ளனர்.

சினிமாவும் காரணம்...

சினிமாவும் காரணம்...

இது குறித்து, அறிவியல் பூர்வமாக நிரூபிக்காத வரை எதுவும் உண்மை இல்லை என்று சர்வதேச விஞ்ஞானிகள் ஒதுங்கி கொண்டாலும், வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய சந்தேக ஆராய்ச்சி மட்டும் நின்றபாடில்லை. பல நாடுகளில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Chinese man has posted photographs of him posing next to an 'alien' which he claims to have trapped after it crash landed. The pictures of Mr Li standing next to the rather crude looking extraterrestrial have sparked a frenzy of speculation social networking sites across China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X