For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ரத்தத்தில் இந்தியப் பாரம்பரியம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் ரத்தத்தில் இந்தியப் பாரம்பரியம் கலந்திருப்பதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டிஎன்ஏ சோதனை மூலம் இதைக் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தின் அடுத்த மன்னராகப் போகிறவர் வில்லியம்தான். இந்த நிலையில் அவரது ரத்தம் முழுமையான இங்கிலாந்து ரத்தம் இல்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது ரத்தத்தில் இந்தியப் பாரம்பரியம் கலந்திருக்கிறதாம்.

எனவே வில்லியம் முழுமையானஇங்கிலாந்துக்காரர் அல்ல அவர் பாதி இந்தியர் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

Prince William has Indian heritage, DNA proves

வேலைக்காரப் பெண்ணின் டி.என்.ஏ

வில்லியமின் உமிழ்நீரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனையில், வில்லியமின் தாயார் டயானாவின் பரம்பரையிடம் வேலை பார்த்து வந்த ஒரு வேலைக்காரப் பெண்ணின் டிஎன்ஏ, வில்லியமின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகிறதாம்.

தாய் வழி எள்ளுப் பாட்டி

வில்லியமின் தாய் வழி எள்ளு எள்ளு எள்ளு எள்ளுப் பாட்டி எலிஸா கீவார்க். இவர் இளவரசர் வில்லியமின் எள்ளு எள்ளு எள்ளு எள்ளு தாத்தா தியோடர் போர்ப்ஸ் என்பவரிடம் வேலைக்காரப் பெண்ணாக இருந்தார். இந்த தியோடர், ஸ்காட்லாந்து வியாபாரி ஆவார். இவர் கிழக்கு இந்தியக் கம்பெனியில் இருந்தவர். சூரத்தில் வேலை பார்த்து வந்தார்.

எலீசாவின் ரத்தம்

உண்மையில் இந்த எலிசா ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது பாரம்பரியம் இந்திய வம்சாவளி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது எலிசாவின் ரத்தத்தில் இந்திய பாரம்பரியம் கலந்துள்ளதாம். எனவே அவரே இந்திய ஆர்மீனியக் கலப்பாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் வாதமாகும்.

தாய்வழி மரபணு

எலிசாவின் தாய் வழியில் இந்த மரபணு வந்துள்ளதாம்.இந்த எலிசாவின் டிஎன்ஏதான், வில்லியமின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகிறதாம். டயானாவிடமும், அவரது மகன்கள் வில்லியம், ஹாரி ஆகியோரிடமும் இந்த டிஎன்ஏ பரவி வந்துள்ளது.

டயானா வழியாக பரவியது

தற்போது வில்லியம், ஹாரி வரை வந்துள்ள இந்த இந்திய பூர்வீகமானது, அவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு பரவ வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. தாய் வழியாகத்தான் இது பரவும் என்பதால் இனிமேல் இது பரவ வாய்ப்பில்லையாம்.

இந்தியாவில் வில்லியம்

அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டுள்ளார வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்திருப்பது அவரை ஆச்சரியப்படுத்தலாம்.

English summary
Prince William, second-in-line to the throne, will be first British king with proven Indian ancestry, DNA analysis has revealed. The DNA analysis of saliva samples taken from the Duke of Cambridge's relatives have established a direct lineage between the 30-year-old prince and an Indian housekeeper on his mother Princess Diana's side. It is his only non-European DNA and means he will become the first head of the Commonwealth with a clear genetic link to its most populous nation - India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X