For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா மறுப்பு... யு.எஸ். பார்லி. குழுவில் விவாதம்!

By Mathi
Google Oneindia Tamil News

US Congressional committee fiercely debates Narendra Modi visa issue
வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிற விவகாரம் குறித்து அமெரிக்க பார்லிமென்ட் குழுவில் விவாதிக்கப்பட்டது.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ஏற்பட்ட மத கலவரத்தை சுட்டிக்காட்டி நரேந்திர மோடிக்கு அமெரிக்கா தொடர்ந்து விசா வழங்க மறுத்துவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க பார்லிமென்ட் குழுவின் முக்கிய கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. சிதியா லும்மிஸ், மோடிக்கு விசா மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து மோடிக்கு விசா மறுக்கப்படுவதை கண்டித்தும், ஆதரித்தும் குரல்கள் எழுந்தன.

சர்வதேச மத விவகாரங்களுக்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் காத்ரினா லாண்டோஸ் ஸ்வெட் பேசுகையில், அமெரிக்க சட்டப்படி அவர் குற்றம் செய்திருப்பார் என யூகித்து அந்த அடிப்படையில் தண்டிப்பது என்பது பொருத்தமாக இருக்காது என்றார். அதேபோல் மோடி இந்தியாவின் பிரதமராகி விட்டால், அதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

English summary
The issue of denial of visa to Gujarat chief minister Narendra Modi was fiercely debated by a key Congressional committee, with an influential Republican party lawmaker questioning the decision of the US government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X