சூறாவளியால் தொட்டில் பறந்து சென்று விழுந்ததில் 3 மாத ஆண் குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
தேனி: போடி அருகே சூறாவளி காற்றில் தொட்டில் பறந்ததில் அதில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத குழந்தை பலியானது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலையைச் சேர்ந்தவர் சிவகுமார்(26). சுண்ணாம்பு காளவாசல் நடத்தி வருகிறார். அவரது மனைவி போதுமணி(23). அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. அந்த தம்பதிக்கு காளிரத்தினம் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு குழந்தையை வீட்டின் முன்பகுதியில் உள்ள தகர ஷெட்டில் இருந்த தொட்டிலில் தூங்க வைத்துள்ளனர். அப்போது திடீர் என்று சூறாவளிக் காற்று வீசியது. இதில் தகரக் கூரையுடன் தொட்டிலும் சேர்ந்து பறந்தது. சிறிது தூரம் பறந்து தொட்டில் ஒரு இடத்தில் கீழே விழுந்தது. இதில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காளிரத்தினம் பரிதாபமாக பலியானது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications