For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல் களத்தில் தேமுதிகவும் குதிக்கிறது!

Google Oneindia Tamil News

VIjayakanth discusses with party leaders on RS poll
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவும் போட்டியிடுகிறது. விஜயகாந்த் தலமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபப்ட்டது.

ராஜ்யசபா தேர்தலில் தேமுதகவின் நிலைப்பாடு பெரும் குழப்பமாக இருந்தது. அக்கட்சியின் ஆதரவை திமுக எதிர்பார்த்திருந்தது. ஆனால் திமுகவின் ஆதரவுடன் தங்களது வேட்பாளரை நிறுத்த தேமுதிக விரும்பியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், திமுக தனது வேட்பாளரை நிறுத்தி விட்டது. சிபிஐயும் வேட்பாளரை அறிவித்து விட்டது. எனவே சிபிஎம்மும், சிபிஐக்கே ஆதரவளிக்கும் நிலை. எனவே தேமுதிக தனியாக போட்டியிட்டு வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று விஜயகாந்த் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தீவிர ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையின் இறுதியில் தேர்தலி்ல் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டதாம். மேலும் வேட்பாளர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMDK president VIjayakanth holding discussion with party leaders on RS poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X