For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஆறுதல் டானிக் கொடுத்த ஹர்பஜன்

Google Oneindia Tamil News

Harbhajan turns counsellor for stranded pilgrims
டேராடூன்: வட இந்தியாவின் கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிக்கும் பத்ரிநாத் பக்தர்களுக்கு மத்தியில் தானும் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பக்தர்களிடம் ஆறுதலாக கலந்து பேசியதால் அவர்கள் நிம்மதியடைந்தனர்.

பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கும், கன மழையும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பலர் வெள்ளத்தில்சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜோசிமாத் என்ற இடத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர்.

அங்கு சிக்கியுள்ள பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். பத்திரமாக வீடு திரும்புவோமா என்ற அச்சத்தில் உள்ளனர். நேற்று அவர்களை ஹர்பஜன் சிங் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுடன் பேசினார். அவர்களை அமைதிப்படுத்தினார்.தைரியமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

ஹர்பஜன் சிங் தங்களிடம் வந்து சகஜமாக பேசியதால் பக்தர்களும் சற்றே உற்சாகமடைந்தனர்.

ஜோசிமாத்தில் உள்ள இந்திய திபெத்திய எல்லைப் போலீஸ் முகாமில் தற்போது ஹர்பஜன் சிங் தஞ்சமடைந்து தங்கியுள்ளார். அவர் ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு செல்வதற்காக வந்து மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

English summary
Cricketer Harbhajan Singh, who has been stranded in Joshimath, today took the role of a counsellor alongside ITBP personnel as he met a number of pilgrims hit by incessant rains and floods. The cricketer is staying at the Indo-Tibetan Border Police (ITBP) camp at Joshimath since the last three days after he too could not reach Hemkund Sahib gurudwara due to inclement weather.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X