For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் உடல்நலக் குறைவு- ஆர்.எஸ்.எஸ்.தலைவருடனான அத்வானி சந்திப்பு ரத்து!

By Mathi
Google Oneindia Tamil News

LK Advani unwell, will not meet RSS chief Mohan Bhagwat today
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடான இன்றைய சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நியமனம் செய்ததற்கு மூத்த தலைவர் அத்வானி அதிருப்தி தெரிவித்து கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமாதானம் செய்ததையடுத்து தனது முடிவை அத்வானி மாற்றிக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் அத்வானி இல்லத்தில் நரேந்திர மோடி நேற்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், அத்வானியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மோகன் பகவத்தை அவர் நாளை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Senior BJP leader LK Advani has cancelled his meeting with Rashtriya Swayamsewak Sangh or RSS chief Mohan Bhagwat today because he is unwell. Mr Advani, who has also cancelled other meetings that he was supposed to attend during the day, is now expected to meet Mr Bhagwat tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X