For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூன் 19.. சூரிய ஒளியை அசாஞ்சே பார்த்து 365 நாட்கள் ஆச்சு!

By Mathi
Google Oneindia Tamil News

365 days on ice: Assange still holed up in Ecuador's London Embassy
லண்டன்: உலகை உலுக்கிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் அடைக்கலமாகி ஓராண்டுகள் ஆகிவிட்டன. அதாவது சூரிய ஒளியை அசாஞ்சே பார்த்து 365 நாட்கள் ஆகிவிட்டன.

பாலியல் வழக்கில் சுவீடன் கோரியதால் கடந்த ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றம், அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. ஆனால் அசாஞ்சேவுக்கு இங்கிலாந்தில் உள்ல ஈக்வடார் நாட்டு தூதரகம் அடைக்கலம் கொடுத்தது. இப்படி அசாஞ்சே அடைக்கலம் புகுந்தது கடந்த ஆண்டு இதே ஜூன் 19-ந் தேதிதான்.

அன்று உள்ளே போன மனிதர் இன்றுவரை வெளியே வரவில்லை. அப்படி அவர் வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்பதுதான் நிலைமை. இந்நிலையில் ஈக்வடார் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

அதன்பின்னர் ஈக்வடார் தூதரகம் சென்ற அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அசாஞ்சேவை சந்தித்துப் பேசினார். அவருக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

English summary
Wikileaks founder Julian Assange took shelter in the Ecuadorian Embassy in London one year ago Wednesday, sparking a standoff with UK authorities that could leave the world-renowned whistleblower cooped up for years to come. When Assange first made his asylum bid 365 days ago, the tense standoff that ensued seemed likely to ignite an international incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X