For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ப்பிணிகளே, வயித்துக்குள்ள இருக்கற குட்டி, நீங்க சொல்ற கதையை கேட்குமாம்...

Google Oneindia Tamil News

நியூயார்க்: கர்ப்பத்தில் இருக்கும் போதே குழந்தை தாயின் பேச்சை உற்றுக் கவனிக்க ஆரம்பித்து விடுகிறது என சமீபத்து ஆய்வில் உறுதி படுத்தியுள்ளார்கள்.

மகாபாரதத்தில், சக்கர வியூகம் குறித்து அர்ஜூனன் கூறியதைக் கருவில் இருந்த அபிமன்யு கேட்டு தெரிந்து கொண்டதாக ஒரு பகுதி வரும். அக்கூற்றை தற்போது உண்மை என நிரூபித்துள்ளது அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று.

கர்ப்பிணிகள் மற்றும் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கருவில் இருக்கும் குழந்தை தாயின் குரலை சரியாக இனம் கண்டு கொள்கிறது என தெரிய வந்துள்ளதாம்.

ஆய்வில் நிரூபணம்...

ஆய்வில் நிரூபணம்...

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இதனை நிரூபித்துள்ளனர்.

கதை சொல்லப் போறேன்...

கதை சொல்லப் போறேன்...

கிட்டத்தட்ட 36 வாரம் குழந்தை வளர்ச்சியுடைய கர்ப்பிணிகளிடம் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து சத்தம் போட்டு படிக்க சொன்னார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்போது வயிற்றில் கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

கவனமா கேட்குமாம்...

கவனமா கேட்குமாம்...

ஆச்சர்யமாக, தாய் கதைப்புத்தகம் படிக்கும் போது வயிற்றில் உள்ள குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து, அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது.

கதை கேட்கும் பாப்பா...

கதை கேட்கும் பாப்பா...

தாயின் சொல்லும் கதையைக் கேட்பதாலேயே, இந்த மாற்றம் குழந்தையிடம் நிகழ்ந்தது என இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
Amazingly, babies can recognize their mother's voice even before birth. Researchers have long known that newborns recognize and prefer their mom's voice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X